ஒரு கண்ணீர் கடிதம்...
ஒரு கண்ணீர் கடிதம்...
காஷ்மீர் முதல் குமரி வரை
மிஞ்சியது என்னவோ
குமரிக்கரையில் ஒரு பிடி அஸ்தி தான்
என்னை மீட்க ஆடை துறந்தவனுக்கு
கோடானகோடி பேர்
தோள் கொடுக்க இருந்த போதும்
அவரை தொட்டது என்னவோ
கோட்சேவின் தோட்டா பரிசு மட்டுமே
அவர் சுவாசம் நிறுத்தியதே என் வரலாறு
என்பது தான் இங்கு வேதனை...
அன்றே சொன்னான்
நள்ளிரவில் பெற்றோம்
இன்னும் விடியவே இல்லை என்று....
இன்றும் அப்படித்தானே
அநீத இருள் சூழ்ந்திருக்கிறது
எனினும் பயணிக்கிறேன்
இளைய சமுதாயமே
உன் மீதுள்ள நம்பிக்கையில்
உன் மீதுள்ள நம்பிக்கையில்
ஒரு சுதந்திர விடியலை நோக்கி...
அன்புடன்,
இந்தியா
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment